🪔 Year-Ahead Report · ₹499See report →

← All reports

ஓராண்டு பலன் அறிக்கை · 70+ பக்கங்கள்

Year-Ahead Report — 1Year-Ahead Report — 2Year-Ahead Report — 3Year-Ahead Report — 4Year-Ahead Report — 5

📄 டிஜிட்டல் அறிக்கை (PDF) · 71 பக்கங்கள் · சில நிமிடங்களில் மின்னஞ்சலில்

தயாரிப்புப் படங்கள் விளக்கத்துக்காக மட்டுமே.

📕 அச்சிட்ட ஹார்ட்கவர் புத்தகமாகவும் கிடைக்கும் — ₹2,999, இந்தியாவில் 7–10 நாட்களில் டெலிவரி

வரும் ஆண்டு ஒரே மாதிரி ஓடாது. பன்னிரண்டு மாதங்கள், பன்னிரண்டு விதம் — அதில் நான்கு மாதங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன.

ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு புக்தி, ஒரு கோசார நிலை. சில மாதங்கள் புதிதாகத் தொடங்க ஏற்றவை, சில கையில் இருப்பதை உறுதிசெய்ய, ஓரிரண்டு அமைதியாகக் கடந்துபோக. பன்னிரண்டையும் ஒவ்வொன்றாகப் பார்த்து, நல்ல நேரங்களைத் தேதியோடு சொல்கிறது இந்த அறிக்கை.

₹499

⚡ சில நிமிடங்களில்  ·  🔒 பிறப்பு விவரங்கள் யாருடனும் பகிரப்படாது ·  🌐 8 இந்திய மொழிகள்

இன்னும் முடிவு செய்யவில்லையா? முதலில் உங்கள் இலவச ஜாதகத்தைப் பாருங்கள் →

A woman planning her year with her Year-Ahead Report
இப்போது உங்களுக்குத் தெரியாதவை

வருடப் பலன்கள் பெரும்பாலும் கைகொடுக்காதது ஏன்? அதற்கு மாற்று என்ன?

ராசியை வைத்து எழுதப்படும் வருடப் பலன், உலகில் பன்னிரண்டில் ஒருவருக்கு — கோடிக்கணக்கானவர்களுக்கு — ஒரே பலன். உறுதியாக எதையும் சொல்லாததால் அது தவறாவதும் இல்லை. இந்த அறிக்கை அதற்கு நேர் எதிரானது.

1

நீங்கள் வாழ்வது “இந்த வருடத்தில்” அல்ல — ஒரு குறிப்பிட்ட புக்தியில்.

பெரும்பாலும் வருடத்தின் நடுவிலேயே உங்கள் புக்தி மாறிவிடும்; அப்போது வருடத்தின் போக்கே மாறும். ஒரு புக்தியில் தொடங்கி இன்னொன்றில் முடியும் வருடம் உண்மையில் இரண்டு வருடங்கள். அதை ஒன்றாகக் கணிப்பதால்தான் வருடப் பலன்கள் பாதி பலித்து, பாதி பலிக்காமல் போகின்றன.

2

நல்ல மாதம் என்பது உணர்வு அல்ல — அதற்குத் தேதி உண்டு.

குருவும் சனியும் மெதுவாக நகர்பவை; அவற்றின் நிலை பல ஆண்டுகள் முன்பே கணிக்கப்பட்டுவிடும். உங்கள் ஜாதகத்துக்கு எந்த மாதங்கள் துணை நிற்கும், எவை நிற்காது என்று அவற்றைக் கொண்டு சொல்ல முடியும். இரண்டையும் இந்த அறிக்கை தருகிறது — ஒவ்வொரு மாதத்திலும் பலம் உச்சத்தில் இருக்கும் நாட்களோடு.

3

ஒரு வருடத்தில் நடக்கும் பெரும்பாலான தவறுகள் முடிவில் அல்ல, நேரத்தில்.

முடிவு சரியாகத்தான் இருந்தது; எடுத்த மாதம்தான் தவறு. ஜாதகம் கதவை மூடும் நேரத்தில் தொடங்குவது, அல்லது திறந்திருந்த ஒரே மாதத்தைக் காத்திருந்தே கழிப்பது — இதனால் ஏற்படும் இழப்பு நாம் நினைப்பதைவிடப் பெரியது. ஏனென்றால் நேரத்தைச் சரிபார்க்க ஒரு வழி இதுவரை நம் கையில் இருந்ததில்லை.

பன்னிரண்டு மாதங்கள், ஒவ்வொன்றுக்கும் தனிப் பலன், தேதிகளோடு. இதுதான் இந்த அறிக்கை.

பன்னிரண்டு மாதங்கள். பன்னிரண்டு பலன்கள். தேதிகளோடு.

₹499
என் அறிக்கையைப் பெற → ₹499
PDF-க்குள்ளே

உங்கள் அறிக்கையில் இருப்பவை

உங்கள் சொந்த ஜாதகத்திலிருந்து, மாதம் மாதமாக உருவாகும் அறிக்கை இது. உள்ளே இருப்பவை:

10 பகுதிகளையும் பாருங்கள்▾
  1. 01இந்த அறிக்கையைப் பற்றிஎப்படிப் படிப்பது, எந்த ஜாதகத்தை வைத்துக் கணிக்கப்பட்டது.
  2. 02இப்போது நீங்கள் இருக்கும் நிலைவாழ்வின் பத்து துறைகளுக்கும் இன்றைய மதிப்பெண், ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் ஆலோசனையும்.
  3. 03உங்கள் வருடம், உண்மையான காலப்பிரிவுகளில்ஜனவரியில் அல்ல — உங்கள் புக்தி மாறும் இடங்களில் வருடம் பிரிக்கப்படுகிறது.
  4. 04நல்ல நேரங்கள் — தொழில், உத்தியோகம்வேலையில் அடுத்த அடி எடுத்துவைக்க ஜாதகம் துணைநிற்கும் தேதிகள்.
  5. 05நல்ல நேரங்கள் — பணம், நிதிவருமானம், முதலீடு, பெரிய வாங்குதல்களுக்கு ஏற்ற காலங்கள்.
  6. 06நல்ல நேரங்கள் — காதல், உறவுகள்உறவு பாவங்கள் எப்போது சாதகம், எப்போது இல்லை.
  7. 07நல்ல நேரங்கள் — உடல்நலம், ஆற்றல்ஆற்றலைச் சேமித்து நிதானமாக இருக்க ஜாதகம் சொல்லும் மாதங்கள்.
  8. 08நல்ல நேரங்கள் — அதிர்ஷ்டம்முயற்சிக்குத் தடைகள் குறைவாக இருக்கும் காலங்கள்.
  9. 09மாதவாரிப் பலன்பன்னிரண்டு மாதங்களும், ஒவ்வொன்றும் அதன் தசை-புக்தி, கோசாரப்படி.
  10. 10நிறைவுரைஇந்த வருடம் உங்களுக்கு எதற்கானது — எளிய வார்த்தைகளில்.

📄 ஆழத்தைப் பற்றி எங்கள் வார்த்தையை நம்ப வேண்டாம் — , படித்துவிட்டு முடிவெடுங்கள்.

A young professional reading his Year-Ahead Report
இலவசத்தைவிட இது ஏன்

எங்கோ கிடைக்கும் இலவச அறிக்கை அல்ல இது

ஜனவரியில் அல்ல, புக்தி மாறும் இடத்தில் பிரிவு

காலண்டர் வருடம் கணக்கு வைக்க ஒரு வசதி, அவ்வளவே. உங்கள் ஜாதகம் புக்தி மாறும்போதுதான் திசை மாறுகிறது; அறிக்கையும் அந்த இடத்திலேயே பிரிகிறது.

பருவம் அல்ல, தேதி

“வருட நடுவில் நன்றாக இருக்கும்” என்பது திட்டம் அல்ல. இங்கே ஒவ்வொரு நல்ல நேரத்துக்கும் தொடக்கத் தேதியும் முடிவுத் தேதியும் உண்டு — நேரே காலண்டரில் குறித்துக்கொள்ளலாம்.

பத்து துறைகள், தனித்தனி மதிப்பெண்

தொழில், பணம், காதல், குடும்பம், உடல்நலம், அதிர்ஷ்டம் என ஒவ்வொன்றும் தனியாக. ஏனென்றால் வேலைக்கு அருமையாகவும் உடல்நலத்துக்குச் சவாலாகவும் ஒரே வருடம் அமைவது மிகச் சாதாரணம்.

உங்கள் பிறப்பு விவரங்களிலிருந்து மட்டுமே

நீங்கள் பிறந்த தேதி, நேரம், ஊர். ராசிப் பொதுப்பலனும் இல்லை, ஆயத்த வார்ப்பும் இல்லை.

A couple planning their year together

✓ இது உங்களுக்கானது —

  • அடுத்த வருடம் செய்ய ஒரு திட்டம் இருக்கிறது; அதை எந்த மாதத்தில் செய்வது என்று தெரிய வேண்டும் என்றால்.
  • ஒரு பத்தி பொதுப்பலன் அல்ல, கையில் எடுத்துப் பயன்படுத்தக்கூடிய காலப்பிரிவுகள் வேண்டும் என்றால்.
  • 15-ஆண்டு அறிக்கை இப்போது வேண்டாம், ஆனால் இலவச ராசிபலனைவிட அதிகம் வேண்டும் என்றால்.
  • “ஆகஸ்ட்தான் அந்த மாதம்” என்று நவம்பரில் தெரிந்துகொள்வதைவிட இப்போதே ₹499 செலவிடலாம் என்றால்.

✕ இது உங்களுக்கானது அல்ல —

  • நீண்ட காலப் பார்வை வேண்டும் என்றால் — 15-ஆண்டு பலன் அறிக்கை 12 அல்ல, 180 மாதங்களைத் தருகிறது; இதில் இல்லாத முழு ஜாதக ஆய்வும் அதில் உண்டு.
  • ஒரே கேள்விக்கு ஆம்/இல்லை பதில் போதும் என்றால் — ஒரு பண்டிதருடன் பதினைந்து நிமிடம் பேசுங்கள்.
ஒப்பிட்டுப் பாருங்கள்

மற்றவற்றோடு ஒப்பிட்டால்

இலவச வருட ராசிபலன்ஆப்-களின் வருடப் பலன்இந்த அறிக்கை
உங்களுக்காக மட்டும் எழுதப்பட்டது—ஓரளவு✓
ஒவ்வொரு மாதத்துக்கும் தனிப் பலன்——✓
உங்கள் உண்மையான புக்தி மாற்றத்தில் பிரிவு——✓
தேதியிட்ட நல்ல நேரங்கள்——✓
பத்து துறைகளுக்கும் மதிப்பெண்—ஓரளவு✓
உங்கள் பிறந்த நேரம், ஊரிலிருந்து—✓✓
மாதாமாதம் திறந்து பார்க்க PDF——✓

இன்னும் சில நிமிடங்கள் — உங்களுக்குத் தெரிந்துவிடும்.

₹499
என் அறிக்கையைப் பெற → ₹499
A family with the report at Diwali

நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் மாதங்கள் இப்போதே ஓடிக்கொண்டிருக்கின்றன

இந்த அறிக்கை இன்றிலிருந்து அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்கானது. தள்ளிப்போடும் ஒவ்வொரு வாரமும், பணம் கொடுத்தும் பயன்படுத்தாமல் போகும் பகுதி. உங்கள் வருடத்தின் சிறந்த காலம் அடுத்த இரண்டு மாதங்களிலேயே வருமானால், முன்கூட்டியே தெரிந்தால்தான் அந்தத் தகவலுக்கு மதிப்பு. அந்த நல்ல நேரம் யாருக்காகவும் காத்திருக்காது.

The report on a phone beside a cup of chai
வாங்கும் முன்

வாங்கும் முன் பலர் கேட்பவை

இல்லை — நீங்கள் ஆர்டர் செய்யும் மாதத்திலிருந்தே தொடங்கும். இன்றிலிருந்து அடுத்த பன்னிரண்டு மாதங்கள்; உங்களுக்குத் தேவையானதும் அதுதான்.

பன்னிரண்டு மாதங்கள். பன்னிரண்டு பலன்கள். தேதிகளோடு.

உங்கள் ஜாதகத்திலிருந்து உருவாகும் 70+ பக்கங்கள் — சில நிமிடங்களில் உங்கள் மின்னஞ்சலுக்கு.

₹499

என் அறிக்கையைப் பெற → ₹499

பிறந்த நேரத்தைத் தவறாகக் கொடுத்துவிட்டீர்களா? என் கணக்கில் இலவசமாகத் திருத்தலாம் — ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒருமுறை, எப்போது வேண்டுமானாலும். அறிக்கை தானாகப் புதிதாக உருவாகும்.